நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை

புத்ராஜெயா:
நாட்டில் ரோன் 97, ரோன் 95, டீசலின் சில்லறை விலைகள் நாளை முதல் ஜூன் 17 வரை மாற்றமின்றி இருக்கும்.

நிதியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

ரோன் 97 ஒரு லிட்டர் 4.35 ரிங்கிட் என்ற விலையிலும், மானிய விலையிலான ரோம் 95 ஒரு லிட்டர் 1.99 ரிங்கிட் என்ற விலையிலும் தொடர்ந்து விற்கப்படும்.

மானியமில்லாத ரோன் 95 ஒரு லிட்டர் 3.72 ரிங்கிட் என்ற விலையில் விற்கப்படுகிறது.

தீபகற்பப் பகுதிகளில், டீசல் ஒரு லிட்டர் 4.67 ரிங்கிட் என்ற விலையில் தொடர்ந்து விற்கப்படுகிறது.

அதே சமயம், சபா, சரவா, லாபுவான் பகுதிகளில், இது ஒரு லிட்டர் 2.15 ரிங்கிட் என்ற மானிய விலையில் விற்கப்படுகிறது.

மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 2.05 ரிங்கிட்டாகவும், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் டீசல் ஒரு லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாகவும் விற்பனை செய்யப்படுகிறது என அமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset