நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பெர்சத்து கட்சி முழு பலத்தை நிரூபிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பெர்சத்து கட்சி முழு பலத்தை நிரூபிக்க வேண்டும்.

நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

பெர்சத்து, பாஸ் கட்சிகளுக்கு இடையில் வலுவான அரசியல் உறவு இருந்தது. ஆனால் பாஸ் கட்சி இந்த உறவை துண்டித்துக் கொண்டது.

இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இருந்த போதிலும் அரசியலில் இது சகஜமாகும்.

அதே வேளையில் ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் விரைவில் தேர்தல்கள் நடைபெறவுள்ளது.

குறிப்பாக நெகிரி செம்பிலானில் பெர்சத்து கட்சி தனது பலத்தை நிரூபிக்க வேண்டும்.

நெகிரி செம்பிலான் மக்கள் பெர்சத்து கட்சிக்கு முழுமையான ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.

பெர்சத்து கட்சியின் வெற்றி அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset