செய்திகள் மலேசியா
பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை பாஸ் கட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது
கோலாலம்பூர்:
பாஸ் கட்சி, பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
தலைவர் டான்ஸ்ரீ ஹாடி அவாங் தலைமையில் நடைபெற்ற பாஸ் மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டம் இன்று இரவு கோலாலம்பூரில் உள்ள பாஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.
பாஸ், பெர்சத்து இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவுகளைச் சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டிய கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, பாஸ் கட்சி பெர்சத்துவுடனான உறவைத் துண்டிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த மே 22 அன்று, ஹாடி தனது கட்சி பெர்சத்துவுடனான உறவுகளை மறுமதிப்பீடு செய்து வருவதாகவும், டான்ஸ்ரீ மொஹையின் யாசினின் கட்சி இல்லாமல் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 8, 2026, 5:00 pm
6 மாணவிகளிடம் பாலியல் துஷ்பிரயோகம்?: 14 குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியர்
June 8, 2026, 4:20 pm
அடுக்குமாடி குடியிருப்பில் உயரமான தளத்திலிருந்து விழுந்த இரு சிறுவர்கள்: ஒருவர் பலி
June 8, 2026, 1:47 pm
