நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான தொகுதிப் பங்கீட்டை நம்பிக்கை கூட்டணி நிறைவு செய்தது: சைபுடின்

புத்ராஜெயா:

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான தொகுதிப் பங்கீட்டை நம்பிக்கை கூட்டணி இறுதி செய்துள்ளது.

நம்பிக்கை கூட்டணி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.

ஜொகூரில் உள்ள 56 மாநில சட்டமன்றத் தொகுதிகளையும் கூட்டணியின் அங்கக் கட்சிகளிடையே பிரிக்கும் பணி, சமீபத்தில் நடைபெற்ற செயலகக் கூட்டத்தின் மூலம் நிறைவடைந்தது.

நான் இந்த  நம்பிக்கை கூட்டணி செயலகக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினேன்.

மொத்தம் 56 தொகுதிகளை நம்பிக்கை கூட்டணி கட்சிகளிடையே நாங்கள் இறுதி செய்துள்ளோம்.

நான் செயலகத்திற்கு மட்டுமே தலைமை தாங்குவதால், வழக்கமாக இறுதிப்படுத்தும் நடைமுறைகளை தலைவர் மன்றத்திடம் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

நெகிரி செம்பிலானைப் பொறுத்தவரை, கூட்டணிக் கட்சிகளிடையே ஒன்றுடன் ஒன்று உரிமை கோரும் ஒரே ஒரு தொகுதி மட்டுமே இருந்தது.

ஆனால் அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது.

மாதாந்திர உள்துறை அமைச்சகக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset