செய்திகள் மலேசியா
சபாவிற்கு சுனாமி எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது
கோத்தா கினபாலு:
சபாவிற்கு சுனாமி எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) வெளியிட்டுள்ளது.
இன்று காலை பிலிப்பைன்ஸின் மின்டானோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சபாவின் பல கடலோரப் பகுதிகளுக்கு மெட் மலேசியா சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணிக்குள் தாவாவ், செம்போர்னா, குனாக், லஹாட் டத்து ஆகிய கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக மெட் மலேசியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், அப்பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 8, 2026, 11:48 pm
பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை பாஸ் கட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது
June 8, 2026, 5:00 pm
6 மாணவிகளிடம் பாலியல் துஷ்பிரயோகம்?: 14 குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியர்
June 8, 2026, 4:20 pm
