செய்திகள் மலேசியா
6 பேர் கொண்ட குடும்பம் உயிரிழந்த விபத்து: லோரி ஓட்டுநருக்கான தடுப்புக் காவலை நீதிமன்றம் நிராகரித்தது
அலோர்ஸ்டார்:
6 பேர் கொண்ட குடும்பம் உயிரிழந்த விபத்து தொடர்பில் லோரி ஓட்டுநருக்கான தடுப்புக் காவலை நீதிமன்றம் நிராகரித்தது.
இங்குள்ள காம்பங் பாரு பினாங் துங்கலில் நடந்த கோர விபத்தில் ஆறு பேர் கொண்ட குடும்பம் உயிரிழந்தது.
இந்த விபத்தில் ஈடுபட்ட லோரி ஓட்டுநருக்கு எதிராக காவலில் வைக்கக் கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
மேலும் விபத்து நடந்த உடனேயே கைது செய்யப்பட்ட 49 வயதான அந்த நபரை இன்று விடுவிக்க மாஜிஸ்திரேட் முஹம்மது அஸ்லான் பஸ்ரி அனுமதி அளித்தார்.
முன்னதாக 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரணைக்காக அந்த நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கெடா போலிஸ் தலைவர் அட்லி அபு ஷா நேற்று அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 8, 2026, 11:48 pm
பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை பாஸ் கட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது
June 8, 2026, 5:00 pm
6 மாணவிகளிடம் பாலியல் துஷ்பிரயோகம்?: 14 குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியர்
June 8, 2026, 4:20 pm
அடுக்குமாடி குடியிருப்பில் உயரமான தளத்திலிருந்து விழுந்த இரு சிறுவர்கள்: ஒருவர் பலி
June 8, 2026, 1:47 pm
