நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூடி95 விளக்கத்தில் தகவல்தொடர்பு அமைச்சுக்கு பிரதமர் அன்வர் பாராட்டு: அரசு கொள்கை விளக்கத்தில் 'சிறந்த உதாரணம்’ என புகழாரம்

புத்ராஜெயா: 

பூடி மடானி ரோன்95 (பூடி95) திட்டத்தை மக்களுக்குத் தெளிவாக விளக்கி செயல்படுத்தியதில் தகவல்தொடர்பு அமைச்சு மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் பாராட்டியுள்ளார். 

அரசாங்க கொள்கைகளை மக்களிடம் விளக்குவதில் இது சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சருமான அன்வர், இந்தத் திட்டம் குறித்து வழங்கப்பட்ட தெளிவான, சீரான விளக்கம் பொதுமக்களின் புரிதலை அதிகரித்து, குழப்பங்களைப் பெருமளவில் குறைத்துள்ளதாக தெரிவித்தார்.

“எனது பார்வையில் இந்த அமைச்சின் மிகப்பெரிய வெற்றி பூடி95 தொடர்பானதே. தெளிவான விளக்கம் வழங்கப்பட்டால் பிரச்சினைகள் பெரிதாக உருவாகாது,” என்று அவர் கூறினார்.

தகவல்தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், தகவல் தொடர்பு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்சா, முழு அமைச்சின் ஊழியர்களுக்கும் மக்களுக்குத் தகவலை திறம்பட கொண்டு சென்றதற்காக அவர் மேலும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தகவல்தொடர்பு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் அவர் இதனை உரையாற்றினார்.

நிகழ்வில் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், துணை அமைச்சர் டியோ நீ சிங், அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபுபக்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக சில தரப்பினர் இன்னும் கவலை வெளியிட்டாலும், பூடி95 திட்டத்தின் செயலாக்கம் அரசாங்க கொள்கைகள் சரியான தகவல் பரிமாற்றத்தின் மூலம் பொதுமக்களால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளதாக பிரதமர் கூறினார்.

பூடி95 என்பது மடானி அரசாங்கத்தின் ஒரு முன்னெடுப்பு ஆகும். இது ரோன்95 பெட்ரோல் மானியத்தை மலேசியர்களுக்கு லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற மானிய விலையில் வழங்கும் திட்டமாகும்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset