நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணி இல்லையென்றால் ஒற்றுமை அரசாங்கம் அமைந்திருக்காது; எதிரிகளுக்கு ஜாஹித் நினைவூட்டல்

ஜொகூர்பாரு:

தேசிய முன்னணி இல்லையென்றால் மத்தியில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்திருக்காது.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி எதிரிகளுக்கு இதனை நினைவூட்டினார்.

தேசிய முன்னணி கூட்டணியைச் சேர்ந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் ஒரு ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க முடியாது.

தேசிய முன்னணியின் 30 இடங்கள் இல்லாமல், தற்போதைய அரசாங்கத்தை வழிநடத்துவதற்கு நம்பிக்கை கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்காது.

இந்த உண்மையை யாரும் மறுக்க முயற்சிக்க வேண்டாம்.

எனவே, நாங்கள் செய்த தியாகங்களையும், ஆற்றிய பங்கையும் அவர்கள் சிறுமைப்படுத்த வேண்டாம் என்று அவர் இன்று ஜொகூரில் நடைபெற்ற தேசிய முன்னணி தேர்தல் கேந்திரத் தொடக்க விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

ஜொகூர் மாநிலத் தேர்தலில் உள்ள 56 இடங்களிலும் போட்டியிடுமாறு தேசிய முன்னணி அரசியல் எதிரிகளை ஜாஹித் அழைத்தார்.

போட்டியிடுங்கள். களத்தில் சந்திப்போம், என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset