செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தலில் 17 தொகுதிகளில் ஜசெக போட்டியிடுகிறது: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் ஜசெக கட்சி 17 தொகுதிகளில் போட்டியிடும்.
இது கடந்த தேர்தலில் கட்சி போட்டியிட்ட 14 தொகுதிகளை விட அதிகம் என்றும் அதன் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
கடந்த 2022 மாநிலத் தேர்தலில் வென்ற 10 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ளும்.
நான்கு தொகுதிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பரிகாரம் தேடும்.
அத்துடன் ஜசெக இதற்கு முன் போட்டியிடாத மூன்று கூடுதல் தொகுதிகளிலும் போட்டியிடும்.
மற்றொரு கூடுதல் தொகுதி கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அது இன்னும் கெஅடிலான், அமானா கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
அந்தப் பேச்சுவார்த்தைகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 7, 2026, 10:19 pm
நோ ஓமர் மீண்டும் அம்னோவுக்கு திரும்பினார்
June 7, 2026, 10:18 pm
ஜசெக ஒத்துழைப்புடன் மந்திரி புசாராவதில் எனக்கு விருப்பமில்லை: ஓன் ஹபிஸ்
June 7, 2026, 6:35 pm
அதிகாரத்தில் நீடிப்பதற்காகப் பொதுத் தேர்தலை ஒத்திவைக்கவில்லை: பிரதமர்
June 7, 2026, 6:34 pm
