நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய கூட்டணியுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான பாஸ் கட்சியின் முன்மொழிவு; பெர்சத்து உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்: மொஹைதின்

கோலாலம்பூர்:

தேசிய கூட்டணியுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான பாஸ் கட்சியின் முன்மொழிவு பெர்சத்து  உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.

தேசியக் கூட்டணிக்குள் உறவுகளை வலுப்படுத்துவதற்கான பாஸ் கட்சி பல முன்மொழிவுகளை வழங்கியுள்ளது.

இது  கட்சியின் உச்ச தலைமை மன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்படும்.

பெர்சத்துவுடனான கட்சியின் உறவுகள் குறித்து பாஸ் பொதுச்செயலாளர் தக்கியூடின் ஹசானிடமிருந்து கடிதம் பெற்ற பிறகு, இந்த விஷயம் விவாதிக்கப்படும்.

பெர்சத்து, பாஸ் உறவு, தேசியக் கூட்டணியை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் தொடர்பாக, ஜூன் 6 தேதியிட்ட ஒரு கடிதத்தை பாஸ் பொதுச்செயலாளரிடமிருந்து நான் பெற்றேன்.

நான் இந்த முன்மொழிவை உரிய முறையில் பரிசீலித்து, இந்த விஷயத்தை பெர்சத்து உச்ச தலைமை மன்றக் கூட்டத்தின் பரிசீலனைக்குக் கொண்டு செல்வேன்.

கூட்டணியில் பாஸ் கட்சியுடன் நல்லுறவைத் தொடர்ந்து பேணுவதில் பெர்சத்து தனது உறுதியையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset