செய்திகள் மலேசியா
ஜொகூர், நெகிரி செம்பிலான் அரசியல் போட்டியில் இனவாதம், பிரிவினைவாத அரசியலையோ மையமாகக் கொண்டிருக்கக் கூடாது: பிரதமர்
சுங்கைப்பட்டாணி:
ஜொகூர், நெகிரி செம்பிலான் அரசியல் போட்டியில் இனவாதம், பிரிவினைவாத அரசியலையோ மையமாகக் கொண்டிருக்கக் கூடாது.
மாறாக நீதி, சம வாய்ப்புகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இரு மாநிலங்களும் சமீபத்தில் தங்களது மாநில சட்டமன்றங்களைக் கலைத்து, மாநிலத் தேர்தல்களுக்கு வழிவகுத்தன.
அரசியல் விவாதங்கள் பெரும்பாலும் இனம், அந்தஸ்து, செல்வம் தொடர்பான கேள்விகளிலேயே மூழ்கிவிடுகின்றன.
அதேவேளையில் சாதாரண மலேசியர்கள், அவர்களது குழந்தைகளின் எதிர்காலம் புறக்கணிக்கப்படுகிறது.
யார் இனவாத உணர்வுகளைத் தூண்டலாம், பெரும்பான்மை-சிறுபான்மைக் கதைகளைச் சுரண்டலாம் அல்லது வெறுப்பைப் பரப்பலாம் என்பது போன்ற போட்டிகளாகப் பொது விவாதங்கள் சுருக்கப்படக்கூடாது.
மாறாக, நீதி, சமத்துவம், மனிதாபிமானத்தின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இன்று இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு வருடாந்திர அரசாங்க மானியத்தை வழங்கிய பின்னர் ஆற்றிய தனது உரையில் அவர் கூறினார்.
ஏற்கனவே உள்ள மத்திய அரசின் ஆதரவோடு கூடுதலாக, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக மேலும் 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுவதையும் அவர் அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 7, 2026, 10:19 pm
நோ ஓமர் மீண்டும் அம்னோவுக்கு திரும்பினார்
June 7, 2026, 10:18 pm
ஜசெக ஒத்துழைப்புடன் மந்திரி புசாராவதில் எனக்கு விருப்பமில்லை: ஓன் ஹபிஸ்
June 7, 2026, 6:36 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் 17 தொகுதிகளில் ஜசெக போட்டியிடுகிறது: அந்தோனி லோக்
June 7, 2026, 6:35 pm
அதிகாரத்தில் நீடிப்பதற்காகப் பொதுத் தேர்தலை ஒத்திவைக்கவில்லை: பிரதமர்
June 7, 2026, 6:34 pm
