நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகாரத்தில் நீடிப்பதற்காகப் பொதுத் தேர்தலை ஒத்திவைக்கவில்லை: பிரதமர்

சுங்கைப்பட்டாணி:

பிரதமராக தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதை ஒத்திவைக்கவில்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலை விட நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குமான முயற்சிகளில் முழுமையாகக் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
அரசியல் நிச்சயமற்ற தன்மையும், அதிகப்படியான தேர்தல்களும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதித்து, நாட்டிற்கு மேலும் தரமான முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைச் சீர்குலைக்கும்.

நான் முதலில் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

அரசியல் நிலையானதாக இருக்க வேண்டும்.

அரசியலை பிரச்சாரத்திற்கோ அல்லது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கோ மட்டும் பயன்படுத்த நான் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset