செய்திகள் மலேசியா
நோ ஓமர் மீண்டும் அம்னோவுக்கு திரும்பினார்
ஜொகூர்பாரு:
டான்ஸ்ரீ நோ ஓமர் மீண்டும் அம்னோவுக்கு திரும்பியுள்ளார்.
ஜொகூர் தேசிய முன்னணியின் தேர்தல் கேந்திரங்கள் அறிமுக விழாவில் டான்ஸ்ரீ நோ ஓமர் கலந்து கொண்டார்.
அவரின் வருகை ரூமா பங்சா நிகழ்ச்சி நிரல் மூலம் கட்சிக்குத் திரும்பிய மற்ற இரண்டு முன்னாள் அம்னோ தலைவர்களுடன் கவனத்தை ஈர்த்தது.
மேலும் இரண்டு முன்னாள் அம்னோ தலைவர்கள் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன், டான்ஸ்ரீ சையத் ஹமீத் அல்பார் ஆகியோரும் பங்கேற்றனர்.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மூன்று மூத்த தலைவர்களிடம் உறுப்பினர் சேர்க்கைப் படிவங்களை வழங்கினார்.
இந்த அம்னோவிற்கு ஒரு அசாதாரணமான வரவேற்பு கிடைத்துள்ளது.
சில காலத்திற்கு முன்பு திசை மாறியிருந்த அம்னோவின் பழைய தலைவர்கள் மட்டுமல்ல, இப்போது மீண்டும் திரும்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 7, 2026, 10:18 pm
ஜசெக ஒத்துழைப்புடன் மந்திரி புசாராவதில் எனக்கு விருப்பமில்லை: ஓன் ஹபிஸ்
June 7, 2026, 6:36 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் 17 தொகுதிகளில் ஜசெக போட்டியிடுகிறது: அந்தோனி லோக்
June 7, 2026, 6:35 pm
அதிகாரத்தில் நீடிப்பதற்காகப் பொதுத் தேர்தலை ஒத்திவைக்கவில்லை: பிரதமர்
June 7, 2026, 6:34 pm
