செய்திகள் மலேசியா
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேஃப் கல்லூரிகளுக்கான பிரதமரின் ஆதரவு; அரசியல் நோக்கம் கொண்டது அல்ல : டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
சுங்கைப்பட்டாணி:
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேஃப் கல்லூரிகளுக்கான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வழங்கும் ஆதரவு அரசியல் நோக்கம் கொண்டது அல்ல.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மஇகா தலைவருமான டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வா இப்ராஹிம் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேஃப் கல்லூரிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறார்.
இந்த ஆதரவு மாணவர்களின் கல்வி நோக்கமாக கொண்டதாகும்.
இதை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தவோ அல்லது தலைமை மாற்றங்களுக்குப் பலியாகவோ ஆக்கிவிடக் கூடாது.
மேலும் இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்குப் பிரதமர் உயர்வான அர்ப்பணிப்பைக் காட்டியிருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது.
எனவே இந்த நல்வாய்ப்பில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேஃப் கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு விவகாரத்தை சற்றும் அரசியல்மயமாக்காத பிரதமருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு டத்தோஸ்ரீ அன்வார் மேற்கொண்ட அதிகாரப்பூர்வப் பயணத்தின்போது பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
இந்த விழாவில், அரசாங்கம் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு 2026ஆம் ஆண்டிற்கான ஆண்டு மானியமாக 25 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியது.
அதே வேளையில் வசதிகளையும் வளர்ச்சியையும் வலுப்படுத்துவதற்காக டேஃப் கல்லூரிக்கு ஒருமுறை வழங்கப்படும் சிறப்பு மானியமாக 20 மில்லியனைன் வழங்க அரசு ஒப்புதல் அளித்தது.
நிதி ஒதுக்கீட்டின் மதிப்பை விட, கல்வித் திட்டத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதில் அரசாங்கம் கொண்டு வரும் செய்தியே மிகவும் முக்கியமானது.
நிதி ஒதுக்கீட்டின் தொகையை விட, அது கொண்டு வரும் செய்தியே மிகவும் அர்த்தமுள்ளதாகும்.
கல்வியானது அரசியல் மாற்றங்களுக்குப் பலியாகிவிடக் கூடாது என்பதையும், மக்களுக்குப் பயனளிக்கும் நல்ல கொள்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் புரிந்துகொண்ட ஒரு தலைமைத்துவ வடிவத்தை இது பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 7, 2026, 10:19 pm
நோ ஓமர் மீண்டும் அம்னோவுக்கு திரும்பினார்
June 7, 2026, 10:18 pm
ஜசெக ஒத்துழைப்புடன் மந்திரி புசாராவதில் எனக்கு விருப்பமில்லை: ஓன் ஹபிஸ்
June 7, 2026, 6:36 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் 17 தொகுதிகளில் ஜசெக போட்டியிடுகிறது: அந்தோனி லோக்
June 7, 2026, 6:35 pm
அதிகாரத்தில் நீடிப்பதற்காகப் பொதுத் தேர்தலை ஒத்திவைக்கவில்லை: பிரதமர்
June 7, 2026, 6:34 pm
