நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜசெக ஒத்துழைப்புடன் மந்திரி புசாராவதில் எனக்கு விருப்பமில்லை: ஓன் ஹபிஸ்

ஜொகூர்பாரு:

ஜசெக ஒத்துழைப்புடன் மந்திரி புசாராவதில் எனக்கு விருப்பமில்லை என்று மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி கூறினார்.

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில்  மாநில அரசை அமைப்பதற்கான ஆணை வழங்கப்பட்டால், ஜொகூர் தேசிய முன்னணி ஜசெக கட்சியுடன் இணைந்து செயல்படாது.

அனைத்து 56 மாநில சட்டமன்ற இடங்களிலும் தனித்துப் போட்டியிட விரும்பும் ஜொகூரின் 26 அம்னோ பிரிவுகள், மாநிலத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு இணங்க இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலைப்பாடு, அம்னோ தலைவரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஜொகூர் பாரு, கோத்தா இஸ்கந்தரில் உள்ள எடுசிட்டி அரங்கில் இன்று நடைபெற்ற 16ஆவது ஜொகூர் மாநில தேர்தல் கேந்திரத்தின் தொடக்க விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset