செய்திகள் மலேசியா
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
தாசெக் கெலுகோர்:
சாலையோர வடிகாலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் குழுவொன்று, இன்று காலை எதிர்பாராத வகையில் ஒரு ஆடவரின் சடலத்தைக் கண்டெடுத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உயிரிழந்தவர் அத்னான் ஹாசிம் (64) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம், கம்போங் நியோர் செபாத்தாங்கில் உள்ள வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பத் தகவல்களின்படி, உயிரிழந்தவரின் இடது கால் முறிந்திருந்ததாகவும், வாகனம் மோதிய பின்னர் வடிகாலுக்குள் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
தனியாக வாழ்ந்து வந்த அடனான், கிராமப்புற வேலைகள் மூலம் வாழ்க்கையை நடத்தி வந்ததாகவும், ஐந்து பிள்ளைகளின் தந்தை என்றும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலிஸார், தீயணைப்பு-மீட்புப் படையினர் இணைந்து சடலத்தை மீட்டனர். தடயவியல் நிபுணர்கள், K9 பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
சடலத்தின் நிலையை அடிப்படையாகக் கொண்டு, அவர் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதனிடையே, மரணத்திற்கான உண்மையான காரணத்தையும் காயங்களின் தன்மையையும் கண்டறிய, சடலம் கெப்பாலா பாதாஸ் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
