செய்திகள் மலேசியா
மூத்த போலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கீன குற்றச்சாட்டுகள்: IPCC கண்காணிப்பில் பரபரப்பு வழக்குகள்
கூச்சிங்:
அரச மலேசிய போலிஸ் படையின் (PDRM) மூத்த உதவி ஆணையர் (SAC) பதவி, அதற்கு மேற்பட்ட உயர் அதிகாரிகளைச் சம்பந்தப்படுத்திய பல்வேறு ஒழுங்கீன, நேர்மையின்மை குற்றச்சாட்டு வழக்குகள் தற்போது போலிஸ் சுயாதீன நடத்தை ஆணையத்தின் (IPCC) தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தேசிய துணை போலிஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்களின் அடிப்படையில் இந்த விவகாரங்கள் IPCC-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“தற்போது உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய இரண்டு முதல் மூன்று முக்கிய வழக்குகள் விசாரணையில் உள்ளன. அவற்றின் முன்னேற்றத்தை நானே நேரடியாகக் கண்காணித்து வருகிறேன். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவேன்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், போலிஸ் அதிகாரிகள் இனி JIPS எனப்படும் உள்நாட்டு கண்காணிப்பு பிரிவு மட்டுமே தங்களைக் கண்காணிக்கிறது என எண்ண முடியாது என்றும், IPCC போன்ற சுயாதீன அமைப்புகளும் ஒவ்வொரு புகாரையும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் எச்சரித்தார்.
“உள்ளக கண்காணிப்பு அமைப்பு இருப்பதால் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் இனி செல்லாது. போலிஸ் படையில் நடைபெறும் எந்தவொரு ஒழுங்கீனமும், குறிப்பாக ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளும், வெளிப்புற அமைப்புகளின் கண்காணிப்பிற்கும் உட்பட்டவை,” என்றார்.
போலிஸ் படையின் மீதான மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு, நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவை கட்டாயமாகப் பேணப்பட வேண்டும் என்றும் அயோப் கான் வலியுறுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
