செய்திகள் வணிகம்
ரூப்பியாவின் சரிவால் மலேசியாவில் பணிபுரியும் இந்தோனேசியர்களுக்குப் ‘பண மழை’
கோலாலம்பூர்:
இந்தோனேசிய ரூப்பியாவின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், மலேசியாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தோனேசிய தொழிலாளர்களுக்கு அது எதிர்பாராத நிதி நன்மையை வழங்கியுள்ளது.
ரிங்கிட்டில் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் மதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். முன்பைவிட குடும்பத்தினர் அதிக தொகையைப் பெறுவதுடன், சேமிப்பையும் அதிகரிக்க முடிவதாக அவர்கள் கூறுகின்றனர்.
மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் பணிபுரியும் மைமுனா அஸ்மடின், ரிங்கிட்டின் வலிமையால் சொந்த ஊருக்கு அனுப்பும் ஒவ்வொரு பணப் பரிமாற்றமும் தற்போது கூடுதல் மதிப்பைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை, மற்றொரு தொழிலாளரான அர்டியான்சா, 1,000 ரிங்கிட் அனுப்பினால் 4.4 மில்லியன் ரூப்பியாவுக்கும் அதிகமாக கிடைக்கிறது எனக் குறிப்பிட்டு, தற்போதைய நிலை தொழிலாளர்களுக்குப் பெரிய நிதி ஆதாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
இதற்கிடையில், ரூப்பியா மதிப்பு தொடர்ந்து சரிவடைந்ததைத் தொடர்ந்து, மலேசியாவில் உழைக்கும் இந்தோனேசியர்கள் தங்களது எதிர்காலத்திற்காக கூடுதல் சேமிப்புகளை உருவாக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும், பலர் இதை ‘பொற்கால வாய்ப்பு’ எனக் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
