செய்திகள் வணிகம்
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
தோக்கியோ-
ஜப்பானின் முன்னணி உறைவிப்பான உணவு மற்றும் தளவாட நிறுவனமான 'நிச்சிரேய்' (Nichirei) அண்மையில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அங்குள்ள பிரபல உணவகங்கள் மற்றும் வணிகங்களின் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
போக்கி (Pocky) போன்ற புகழ்பெற்ற பலகாரங்களைத் தயாரிக்கும் இஸாகி கிளிகோ (Ezaki Glico) நிறுவனம், இந்தத் தாக்குதலால் தங்களின் குளிர்களி (Ice Cream) விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று வழிகள் மூலம் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளது.
கோடைகால வெப்பம் அதிகரித்து வரும் வேளையில் ஏற்பட்டுள்ள இந்தத் தடங்கலால், கிளிகோ நிறுவனத்தின் சுமார் 20 விழுக்காடு குளிர்களி தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல சுஷி (Sushi) உணவகச் சங்கிலியான 'குரா சுஷி' மற்றும் 'கென்டக்கி ஃபிரைடு சிக்கன்' (KFC) ஆகிய நிறுவனங்களும் தங்களின் சில தயாரிப்புகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
கடந்த ஆண்டு 'அசாஹி' (Asahi) மதுபான நிறுவனம் மற்றும் 'முஜி' (Muji) சில்லறை வர்த்தக நிறுவனம் ஆகியவை இதேபோன்ற ரான்சம்வேர் (Ransomware) தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, தற்போது இந்த புதிய சைபர் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து நிறுவனங்களும் தங்களின் கணினி அமைப்புகளைப் பாதுகாப்புடன் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என ஜப்பானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் மினொரு கிஹாரா வலியுறுத்தியுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
