செய்திகள் வணிகம்
பிரபலமான கன்வேயர் சுஷி உணவகமான சுஷிரோ, KLCC கிளையை மூட சுகாதார அதிகாரிகள் உத்தரவு
கோலாலம்பூர்:
ஜப்பானிய கன்வேயர்-பெல்ட் சுஷி சங்கிலித் தொடரான சுஷிரோ, மலேசிய சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தனது சூர்யா KLCC கிளையை இன்று முதல் மூடியுள்ளது. மீண்டும் திறப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அது கூறியுள்ளது.
இன்று தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இந்த மூடல் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்ததாக அந்த உணவகச் சங்கிலித் தொடர் தெரிவித்துள்ளது.
"தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கும், செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், தற்போது மலேசிய சுகாதார அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக" அது கூறியது.
இந்த மூடலுக்கான காரணத்தையோ அல்லது அதிகாரிகளால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளையோ அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
இந்த இடையூறுக்காக வாடிக்கையாளர்களிடம் சுஷிரோ மன்னிப்புக் கோரியது: “இந்தத் தற்காலிக மூடல் காரணமாக எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் கவலைக்கும் நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறோம்.”
மேலும், “முடிந்தவரை விரைவில் உணவகத்தை மீண்டும் தொடங்க முழுமையாக உறுதிபூண்டுள்ளோம்” என்று அது கூறியுள்ளது.
1984-ல் ஜப்பானில் நிறுவப்பட்ட சுஷிரோ, உலகளவில் 800-க்கும் மேற்பட்ட கிளைகளை இயக்கி வரும் நாட்டின் மிகப்பெரிய கன்வேயர்-பெல்ட் சுஷி சங்கிலித் தொடர் நிறுவனங்களில் ஒன்றாகும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
