செய்திகள் இந்தியா
6 நாட்கள் 'இறப்பு மண்டலத்தில்' போராட்டம்: எவரெஸ்டில் காணாமல் போன வழிகாட்டி உயிருடன் மீண்ட அதிசயம்
காட்மாண்டு:
எவரெஸ்ட் மலையின் ஆபத்தான ‘டெத் சோன்’ பகுதியில் ஆறு நாட்களாகக் காணாமல் போன நேபாள மலையேற்ற வழிகாட்டி ஹிலாரி தாவா ஷெர்பா, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
உலகின் உயரமான சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த பின்னர், கடுமையான வானிலை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவிய சூழலில் அவர் மாயமானதாகக் கூறப்பட்டது. உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகக் கருதப்பட்ட நிலையில், எவரெஸ்ட் அடிப்படை முகாமை நோக்கி தனியாக ஊர்ந்து வந்தபோது அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
மீட்புக் குழுவினர் உடனடியாக ஹெலிகாப்டரை அனுப்பி, அவரை காட்மாண்டுவிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முன்னாள் ராயல் மரைன் வீரரான பிரிட்டிஷ் மலையேறி கிறிஸ் த்ரால், மே 29-ஆம் தேதி ஷெர்பாவுடன் சிகரத்தை அடைந்ததாகவும், பின்னர் மோசமான வானிலை காரணமாக அவர்கள் பிரிந்ததாகவும் தெரிவித்தார்.
"எல்லாம் நன்றாக இருக்கிறது, நீங்கள் தொடர்ந்து இறங்குங்கள்" என்று ஷெர்பா கூறியதே அவருடன் நடந்த கடைசி உரையாடல் எனவும் அவர் நினைவுகூர்ந்தார்.
இந்த ஆண்டின் எவரெஸ்ட் மலையேற்ற பருவத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் சிகரத்தை வென்றுள்ள நிலையில், குறைந்தது ஐந்து உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அந்தச் சூழலில், ஆறு நாட்கள் உயிருடன் தாக்குப்பிடித்து திரும்பிய ஷெர்பாவின் கதை, மலையேற்ற உலகில் ஒரு அதிசய மீட்பாக பார்க்கப்படுகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
