செய்திகள் மலேசியா
மலேசியாவில் கட்டாய தொழிலாளர் நடைமுறைகள் இல்லை: அமைச்சு
புத்ராஜெயா:
மலேசியாவில் கட்டாய தொழிலாளர் நடைமுறைகள் இல்லை என்று முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சு கூறியது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் பிரிவு 301-இன் கீழ் நடத்திய விசாரணை குறித்து அமைச்சு ஒரு விரிவான விளக்கத்தை அளிக்கிறது.
இதன் மூலம், நாட்டில் கட்டாய தொழிலாளர் நடைமுறையில் உள்ளது என்பது குறித்த எதிர்மறையான கருத்துக்களை அது நீக்கியுள்ளது.
கடந்த ஜூலை 24 அன்று பிரிவு 122 தற்காலிக வரிவிதிப்பு காலாவதியான பிறகு, மலேசியப் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப் பரிந்துரைத்த, ஜூன் 2 தேதியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் கண்டுபிடிப்புகள், மலேசியாவில் கட்டாய உழைப்பு நடைமுறையில் உள்ளது என்றோ அல்லது மோசமான பணிச்சூழல் நிலவுகிறது என்றோ அர்த்தப்படுத்தவில்லை என அமைச்சு விளக்கியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
