செய்திகள் மலேசியா
கடந்த 12 மணி நேரத்திற்குள் சபா, சரவாக்கில் 2 பலவீனமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன
கோலாலம்பூர்:
கடந்த 12 மணி நேரத்திற்குள், சபாவின் ரானாவ், சரவாக்கின் மம்போங் ஆகிய இடங்களில் 2.9 ரிக்டர் அளவிலான இரண்டு பலவீனமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
ரானாவ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காலை 10.36 மணிக்கு, 10 கி.மீ. ஆழத்தில் கண்டறியப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட் மலேசியா) தலைமை இயக்குநர் முகமது ஹிஷாம் முகமது அனிப் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தின் மையம், வடக்கு அட்சரேகை 6.07°, கிழக்கு தீர்க்கரேகை 116.58° இல் அமைந்திருந்தது.
சபாவில் உள்ள குண்டாசாங், ரானாவ் மற்றும் கோட்டா பெலூட் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
அதே நாளில், இரவு 10.33 மணிக்கு மாம்போங்கில் 10 கி.மீ. ஆழத்தில் அதே அளவுள்ள மற்றொரு பலவீனமான நிலநடுக்கம் கண்டறியப்பட்டது என்று ஹிஷாம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
