செய்திகள் விளையாட்டு
லியோனல் மெஸ்ஸிக்கு அஸ்டூரியாஸ் இளவரசி விருது
மாட்ரிட்:
கால்பந்து நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் பிரிவில் அஸ்டூரியாஸ் இளவரசி விருதைப் பெறவுள்ளார்.
உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கவுள்ள அர்ஜெண்டினா அணியில் ஆறாவது முறையாக மெஸ்ஸி இடம் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.
இந்த மதிப்புமிக்க விருது 38 வயதான மெஸ்ஸியின் அசாதாரண திறமை, அவரது புகழ்பெற்ற விளையாட்டு வாழ்க்கை, நலிவடைந்த குழந்தைகளுக்கு கல்வி, சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான அவரது தொடர்ச்சியான தொண்டு முயற்சிகளை அங்கீகரிக்கிறது.
அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு, இந்த விருதைப் பெறும் சமீபத்திய விளையாட்டுப் பிரமுகர் மெஸ்ஸி ஆவார்.
1987இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த விருது கரோலினா மரின், செபாஸ்டியன் கோ, நியூசிலாந்து தேசிய ரக்பி அணி, ஸ்பெயின் கால்பந்து அணி உள்ளிட்ட புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களுக்கும் அணிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
