செய்திகள் விளையாட்டு
B-18 ஹாக்கி அணி ஆசியக் கோப்பையின் அரையிறுதிக்கு தேசிய ஆண்கள் ஹாக்கி அணி முன்னேறியது
கோலாலம்பூர்:
இன்று ஜப்பானின் ககாமிகஹாராவில் நடைபெற்ற குழு B-வின் கடைசிப் போட்டியில், சீனாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம், 2026 ஆசியக் கோப்பையின் அரையிறுதிக்கான இடத்தை 18 வயதிற்குட்பட்ட தேசிய ஆண்கள் ஹாக்கி அணி உறுதிப்படுத்தியது.
முதல் பாதி முழுவதும் பலத்த எதிர்ப்பை எதிர்கொண்டதில், அது கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது. இருப்பினும், இறுதியில், 41வது நிமிடத்தில், தீரேஷ் குணசீலன் மூலம் ஓர் ஓரப் பந்து (penalty corner) மூலம் நாட்டு வீரர்கள் கோல் வெற்றியைப் பதிவு செய்தனர்.
அந்த தொடக்க கோல், 44வது நிமிடத்தில், அஹ்ம்மத் இத்ஹாம் ஃபிக்ரி முஹம்மத் ரிஸால் அடித்த ஒரு கள கோல் (field goal) மூலம், அதன் முன்னணியை மூன்று நிமிடங்களில் இரட்டிப்பாக்க, இளம் தேசிய அணியின் உற்சாகத்தை ஊட்டியது.
சீனா, இடைவெளியைக் குறைக்கும் வகையில் கோல் அடிக்க மீண்டெழ முயன்றது. இருப்பினும், தேசிய அணி ஒவ்வொரு தாக்குதலையும் தடுப்பதில் திறமையாக இருந்தது.
57வது நிமிடத்தில், ஹாரிக் ஹாடிஃப் முஹம்மத் ஃபாரிக், மற்றொரு ஓரப் பந்தை (penalty corner) இலக்காக்க, மலேசியா அழகிய வெற்றியை உறுதிப்படுத்தியது. இது, தேசிய அணியை 3-0 என்ற வசதியான முன்னிலைக்கு உயர்த்தியது.
அந்த முடிவு, குழு B-வில் இருந்து இரண்டு சிறந்த அணிகளில் ஒன்றாக, மலேசியா அரையிறுதிக்கு முன்னேறுவதை உறுதி செய்தது.
இளம் தேசிய அணி, அரையிறுதியில் இந்தியா அல்லது தென் கொரியாவை எதிர்கொள்ளும்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
