செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து அணி புளோரிடாவில் உலகக் கிண்ண போட்டிக்கான பயிற்சிகளை தொடங்கியது
பாம் பீச் கார்டன்ஸ்:
இங்கிலாந்து அணி புளோரிடாவில் உலகக் கிண்ண போட்டிக்கான பயிற்சிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்காக இங்கிலாந்து தேசிய அணி அமெரிக்காவிற்கு வந்துள்ளது.
இங்கு வந்த பிறகு, இங்கிலாந்து அணி புளோரிடாவில் வெப்பம், ஈரப்பதம் நிறைந்த சூழலில் தனது முதல் இலகுவான பயிற்சியை தொடங்கியது.
இது உலகக் கிண்ண போட்டிக்கான முந்தைய தயார் நிலை பயிற்சிகளாகும்.
உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் தோமஸ் டுச்செல் தலைமையிலான அணி,
சனிக்கிழமை நியூசிலாந்து, அடுத்த வாரம் கோஸ்டாரிகாவுக்கு எதிரான நட்புப் போட்டிகளுக்காக புளோரிடாவின் பாம் பீச்சில் முகாமிட்டுள்ளது.
அதன் பிறகு, ஜூன் 13 அன்று கான்சஸ் சிட்டியில் உள்ள தங்களது பயிற்சி முகாமுக்குச் செல்லவுள்ளது.
வரும் ஜூன் 17 அன்று டல்லாஸில் குரோஷியாவுக்கு எதிராக 'குரூப் எல்' பிரிவு ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடங்கும்.
மேலும் ஜூன் 23 அன்று பாஸ்டனில் கானாவையும், அதைத் தொடர்ந்து ஜூன் 27 அன்று நியூ ஜெர்சியில் பனாமாவையும் எதிர்கொள்ளும்போது, இத்தொடரின் பிற்பகுதியில் தாங்கள் சந்திக்கக்கூடிய வெப்பம், ஈரப்பதம் நிறைந்த காலநிலையின் ஒரு முன்னோட்டத்தைப் பெறுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
