செய்திகள் விளையாட்டு
ராஸ்போர்டும், ஒனானாவும் மீண்டும் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்குத் திரும்பினர்
லண்டன்:
மார்கஸ் ராஸ்போர்டும், ஒனானாவும் மீண்டும் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
பார்சிலோனாவுக்கு நிரந்தரமாக மாறும் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், மென்செஸ்டர் யுனைடெட் வீரர் மார்கஸ் ராஸ்போர்ட், 2026 உலகக் கிண்ண முன்னதாக இங்கிலாந்தின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.
நியூசிலாந்து, கோஸ்டாரிகாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களுக்காக, பாம் பீச்சில் தாமஸ் டுச்செல் அணியுடன் இணைவதற்கு முன்பு, ராஸ்போர்ட் இந்தர்மியாமி அணியுடன் பயிற்சி பெற்று வந்தார்.
பார்சிலோனா ராஸ்போர்ட்டை கடனாக வாங்கும் ஒப்பந்தத்தை செயல்படுத்த பார்சிலோனாவுக்கு ஜூன் 15 வரை அவகாசம் உள்ளது.
ஆனால் மென்செஸ்டர் யுனைடெட் 138.7 மில்லியன் ரிங்கிட் பரிமாற்றக் கட்டணத்தில் உறுதியாக உள்ளது.
மேலும் பார்சிலோனாவுக்கு அந்தத் தொகையில் பாதியை மட்டுமே செலுத்தத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது 28 வயதான வீரரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து மார்கஸ் ராஸ்போர்ட் மீண்டும் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பியுள்ளார்.
ராஸ்போர்டைத் தவிர, கோல்காவலர் ஆண்ட்ரே ஒனானாவும் டிராப்சோன்ஸ்போர் அணி துருக்கி கிண்ணத்தை வெல்ல உதவியதன் மூலம் அந்த அணியுடனான தனது கடன் ஒப்பந்தத்தை முடித்த பின்னர் அணிக்கு திரும்பியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
