செய்திகள் விளையாட்டு
இந்தோனேசியா ஓபனில் ஜூன் ஹாவோ முதல் சுற்றில் வெற்றி
பெட்டாலிங் ஜெயா:
மலேசிய தேசிய ஆடவர் ஒற்றையர் பூப்பந்து நட்சத்திரம் லியோங் ஜூன் ஹாவோ, இன்று இந்தோனேசியா ஓபனில் ஜப்பானின் உலகத் தரவரிசை 11ஆம் இட வீரர் கொடாய் நரோகாவை வீழ்த்தி, தனது முதல் சுற்று தடுமாற்றங்களுக்கு முடிவுக் கட்டியுள்ளார்.
உலக தரவரிசையில் 25ஆம் இடத்தில் உள்ள ஜூன் ஹாவோ, ஜகார்த்தா இஸ்டோரா செனாயனில் நடைபெற்ற ஆட்டத்தில், 21-17, 21-17 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்று 38 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்தார்.
இந்த வெற்றி, இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நான்கு முதல் சுற்று வெளியேற்றங்களுக்குப் பின் கிடைத்த முக்கியமான மீட்பு வெற்றியாகக் கருதப்படுகிறது. தேசிய பயிற்சி அமைப்புக்கும் இது பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
நரோகாவை எதிர்த்து ஐந்து மோதல்களில் இது ஜூன் ஹாவோவின் மூன்றாவது வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், அடுத்த சுற்றில் அவருக்குக் கடும் நெருக்கடி காத்திருக்கிறது. உலக சுற்றுப்பயண சூப்பர் 1000 தொடரின் இரண்டாம் சுற்றில், அவர் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சன் அல்லது பிரான்சின் அலெக்ஸ் லானியரை எதிர்கொள்வார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
