செய்திகள் விளையாட்டு
அர்ஜெண்டினா முகாமில் மெஸ்ஸி தனியாகப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்
கன்சாஸ் சிட்டி:
உலகக் கிண்ண சாம்பியனான அர்ஜெண்டினா அணி, அமெரிக்காவில் தனது முதல் பயிற்சி தொடங்கிய போது, நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனியாகப் பயிற்சியை மேற்கொண்டார்.
இந்தர்மியாமி அணியின் கேப்டனான இவர், மே 24 முதல் இடது தொடை தசைநார் இழுபறியால் அவதிப்பட்டு வருகிறார்.
இருப்பினும், ஜூன் 16 அன்று கன்சாஸ் சிட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிராக நடைபெறும் அர்ஜெண்டினாவின் தொடக்க ஆட்டத்திற்கு அவர் தயாராகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
38 வயதான மெஸ்ஸி, கன்சாஸ் சிட்டியில் உள்ள அர்ஜெண்டினாவின் பயிற்சி முகாமில் இணைந்து, உடற்தகுதிப் பிரச்சினைகள் உள்ள பல சக வீரர்களுடன் திங்கட்கிழமை குறிப்பிட்ட பயிற்சியில் ஈடுபட்டார்.
சிறு காயங்கள், உடற்தகுதிப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட வீரர்கள், பிசியோதெரபி குழுவுடன் மைதானத்தில் குறிப்பிட்ட பயிற்சிகள் மூலம் தொடர்ந்து பயிற்சி செய்து வருகின்றனர்.
மேலும் நல்ல முன்னேற்றத்தைக் காட்டி வருகின்றனர் என்று அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
