நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

காற்றில் பறந்த டெஸ்லா கார்: எலான் மஸ்க்கின் புதிய சாதனை

நியூயார்க்:

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான 'Roadster' என்ற பறக்கும் காரை அறிமுகம் செய்து அனைவரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது. 

நேற்று டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) சோதனை மையத்தில் நடந்த பிரம்மாண்ட நிகழ்வில், எலான் மஸ்க் இந்த காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். 

டெஸ்லாவின் இந்த ரோட்ஸ்டர் கார் ஒரு ராட்சத வளைந்த மேம்பாலம் போன்ற அமைப்பில் செங்குத்தாக ஏறி, தலைகீழாக (Upside-down) பயணித்தது. பின்னர் பாலத்திலிருந்து காற்றில் பாய்ந்து, காற்றில் ஒரு சுழற்சி அதாவது Flip அடித்து மீண்டும் தரையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இந்த செயல் விளக்கத்தை நேரில் பார்த்தவர்களும், வீடியோவில் பார்த்தவர்களும் ஆச்சரியத்தில் வாய் பிளந்தனர்.

Roadster காரில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட கோல்ட்-கேஸ் த்ரஸ்டர்ஸ் மற்றும் கம்ப்ரஸ்ட் ஏர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இதுவே கார் காற்றில் பறக்கவும், காற்றில் சுழன்று பேலன்ஸ் பெற்று தரையில் சரியாக இறங்கவும் உதவியது. மேலும் இந்த பறக்கும் கார் வெறும் 0.81 வினாடிகளிலேயே 0 முதல் 60mph வேகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset