செய்திகள் தொழில்நுட்பம்
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
கலிபோர்னியா:
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாகத் ஜான் டெர்னஸ் (John Ternus) நாளை பொறுப்பேற்கவுள்ளார்.
2011ஆம் ஆண்டிலிருந்து தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள டிம் குக் இனி நிர்வாகத் தலைவராகச் செயல்படுவார்.
இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்ற டெர்னஸ், Apple நிறுவனத்தில் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
தற்போது அவருக்கு 50 வயது.
நிறுவனத்தின் அனைத்துத் தரப்பிலும் அவருக்கு வலுவான ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் 9ஆம் தேதி, Apple நிறுவனத்தின் ஆக அண்மைய iPhone தொடரை டெர்னஸ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் மிகவும் மெதுவாக முன்னேறுவதாக Apple நிறுவனம் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
Siriஇன் மேம்பட்ட குரல் அம்சங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்களும் அதில் அடங்கும்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
October 16, 2026, 4:27 pm
காற்றில் பறந்த டெஸ்லா கார்: எலான் மஸ்க்கின் புதிய சாதனை
September 15, 2026, 10:13 am
தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
