செய்திகள் தொழில்நுட்பம்
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
பெய்ஜிங்:
சீனா வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறுகிறது. சுமார் நான்கு மில்லியன் கார்கள் மீட்கப்படுகின்றன.
டெஸ்லா (Tesla) கார்களுக்குத் தான் ஆக அதிகப் பாதிப்பு. சுமார் மூன்று மில்லியன் டெஸ்லா கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன.
சீனாவின் Xiaomi, Leapmotor, Xpeng உள்ளிட்ட நிறுவனங்கள் அடி வாங்கியுள்ளன.
கார் கதவைத் திறப்பதற்கு நவீன முறையை அறிமுகப்படுத்தியது டெஸ்லா. மின் வாகனங்களில் அது பிரபலம்.
ஆனால் விபத்து ஏற்பட்டால் என்னாகும் என்பதே கவலை.
சீனாவில் ஒரு கார் தீப்பற்றிக் கொண்டபோது சுற்றியிருப்பவர்களால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது, கார்க் கதவைத் திறக்க முடியவில்லை.
திரும்பப் பெறப்படும் கார்களில் கதவு எங்கே இருக்கிறது என்பதைக் காட்டும் அடையாளக்குறி ஒட்டப்படும்.
டெஸ்லா, விபத்து ஏற்பட்டால் சன்னல்கள் திறக்கும் வகையில் மாற்றம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சீனா ஒரு படி மேலே போய், மறைந்திருக்கும் கதவுப்பிடி இனி தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:13 am
தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
