செய்திகள் உலகம்
ஜப்பானை உலுக்கிய ஜாங்மி புயல்: உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
டோக்கியோ:
ஜப்பானின் வகாயாமா மாகாணத்தை தாக்கிய ஜாங்மி புயல், கனமழை, கடும் காற்றுடன் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கோசா ஆற்றிற்கு மிக உயர்ந்த நிலையான (நிலை 5) வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல், ஜப்பானின் மேற்கு, தென்மேற்கு பகுதிகளில் இடைவிடாத கனமழையைக் கொட்டித் தீர்த்துள்ளது. வகாயாமா பகுதியில் உருவான நீடித்த மழைப்பட்டை (Linear Rainband) காரணமாக, மேலும் கடுமையான மழை, பேரிடர் அபாயம் அதிகரித்துள்ளதாக வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அடுத்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் 200 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், திடீர் வெள்ளம், ஆறுகள் கரைபுரண்டு ஓடுதல், நிலச்சரிவு போன்ற அபாயங்கள் அதிகரித்துள்ளன.
இதற்கு முன்பாகவே, ஜாங்மி புயல் கியூஷூ, ஷிக்கோகு தீவுகளையும் தாக்கி, பல ஆறுகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்க வழிவகுத்தது. அதிக ஆபத்து பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
"பாதுகாப்பே முதன்மை" என வலியுறுத்திய ஜப்பான் வானிலை முகமை, பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து, எந்தவித அலட்சியமும் காட்டாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 5, 2026, 3:14 pm
அடுத்தடுத்து வெடிக்கும் எரிமலை: இந்தோனேசியாவில் பதற்றம்
June 5, 2026, 12:48 pm
கியூபா அதிபருக்கு அமெரிக்காவின் அதிரடி தடை: சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பு
June 5, 2026, 11:27 am
தாகத்தின் கொடூரம்: சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பரிதாப பலி
June 5, 2026, 9:56 am
புறப்படுவதற்கு முன் பரபரப்பு:.லுஃப்தான்சா ட்ரீம்லைனர் திடீரென சாய்ந்து விபத்து
June 4, 2026, 2:39 pm
ஆசியான் நாடுகளுக்கான பிரம்மாண்டமான புதிய கடல்வழிப் பாதை: சீனாவின் வரலாற்றுச் சாதனை
June 3, 2026, 2:43 pm
ஐ.நா. சபையின் புதிய தலைவராகிறார் வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான்
June 3, 2026, 10:07 am
2026 உலகக்கோப்பை சர்ச்சை: பிரபல சுவரோவிய கலைஞர் ஃபிஃபா மீது வழக்கு
June 2, 2026, 5:22 pm
