செய்திகள் உலகம்
லெபனான் மீதான இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் அமெரிக்கா உடனான பேச்சு இடைநிறுத்தம் செய்கிறோம்: ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான்:
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உடனான அமைதி பேச்சினை இடைநிறுத்தி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் நிலவும் போர் சூழலை அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டன. இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த சூழலில் மத்தியஸ்தர்கள் மூலம் இரு தரப்பும் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன. அது தொடர்பாக இரு தரப்பும் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து வருகின்றன. இருப்பினும் இதுவரை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்த சூழலில் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உடன் மத்தியஸ்தர்கள் மூலம் மேற்கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தையை இடைநிறுத்தி உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை உடன் தொடர்பு கொண்ட TANSIM செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
