செய்திகள் உலகம்
2026 உலகக்கோப்பை சர்ச்சை: பிரபல சுவரோவிய கலைஞர் ஃபிஃபா மீது வழக்கு
டல்லாஸ்:
2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஏற்பாடுகளைச் சுற்றி புதிய சர்ச்சை வெடித்துள்ளது. டல்லாஸ் நகரின் அடையாளமாக விளங்கிய பிரம்மாண்ட சுவரோவியம் தனது அனுமதியின்றி மறைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, பிரபல கலைஞர் ராபர்ட் வைலண்ட், ஃபிஃபா, தொடர்புடைய தரப்புகள் மீது 99 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட, "Ocean Life" (Whaling Wall 82) என அழைக்கப்படும் எட்டு மாடி உயரமுள்ள சுவரோவியம், கடந்த மாதம் முழுமையாக நீல நிற சாயத்தால் மூடப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
2026 உலகக்கோப்பையை முன்னிட்டு புதிய கலைப்படைப்பை நிறுவுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஏற்பாட்டுக் குழு விளக்கியுள்ள நிலையில், இந்த செயல் தனது கலைப் படைப்பைச் சட்டவிரோதமாக அழித்துவிட்டதாக வைலண்ட் குற்றம்சாட்டியுள்ளார்.
வழக்கில், ஃபிஃபாவுடன் கட்டிடத்தின் உரிமையாளர், நிர்வாக நிறுவனங்களும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
கலைஞரின் தரப்பு, "டல்லாஸின் கலாச்சார அடையாளமாக விளங்கிய இந்த சுவரோவியத்தின் அழிவு, ஒரு கலைப் படைப்பின் இழப்பு மட்டுமல்ல; அது நகர மக்களின் உணர்வுகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பும் ஆகும்" என்று வலியுறுத்தியுள்ளது.
கடல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாபெரும் சுவரோவியங்களால் உலகப் புகழ் பெற்ற வைலண்ட், தனது எழுத்துப்பூர்வ அனுமதியின்றி கலைப்படைப்பு அழிக்கப்பட்டிருப்பது அமெரிக்க கூட்டாட்சி சட்டத்திற்கு எதிரானது என வாதிட்டுள்ளார்.
இதற்கிடையில், 2026 உலகக்கோப்பையின் அரையிறுதி உட்பட ஒன்பது போட்டிகளை நடத்தவுள்ள டல்லாஸ் நகரில், இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
