செய்திகள் உலகம்
பெரும் தீ விபத்தில் ஒரே இரவில் வீடிழந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள்
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் கெமாயோரன் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியுள்ளது.
திங்கட்கிழமை இரவு மக்கள் நெருக்கமாக வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் வெடித்த தீ, வேகமாக பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்ததுடன், 330 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 620 பேர் தங்களது வீடுகளை இழந்து தற்காலிகமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தகவல் கிடைத்தவுடன் ஜகார்த்தா தீயணைப்பு, மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடினர். தீயை இரவு 11.30 மணியளவில் கட்டுக்குள் கொண்டுவந்த அவர்கள், அதிகாலை 4.15 மணியளவில் மீட்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்தனர்.
இதற்கிடையில், இந்த பேரழிவை ஏற்படுத்திய தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே இரவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடிழந்து தவிக்கும் இந்த சம்பவம், ஜகார்த்தா மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 4:27 pm
ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா தாக்குதல்கள் தீவிரப்படுத்தி உள்ளது
September 5, 2026, 5:18 pm
பங்களாதேஷில் தட்டம்மையால் உயரும் மரண எண்ணிக்கை
September 5, 2026, 2:50 pm
இந்தோனேசியாவில் அனாக் கிரக்காத்துவா எரிமலை மீண்டும் வெடிப்பு: சுனாமி ஆபத்து இல்லை எனத் தகவல்
September 5, 2026, 11:38 am
ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணையாக மாற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை
September 4, 2026, 9:43 pm
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 12:35 pm
நேப்பாள வெள்ள பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 3, 2026, 5:43 pm
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: இதுவரை 16,300 பேர் வரை உயிரிழப்பு
September 2, 2026, 4:25 pm
