செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சாம்பியன்
புடாபெஸ்ட்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
புஸ்காஸ் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் அர்செனல் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.
இதை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெனால்டியில் சிறந்து விளங்கிய பிஎஸ்ஜி அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியினர் ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
குறிப்பாக பிஎஸ்ஜி அணி சாம்பியன் லீக் பட்டத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.
அதே வேளையில் தங்களின் 140 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக சாம்பியன் லீக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற அர்செனலின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 10:45 am
ஸ்லாட் சரியான நேரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்: ஜெரார்ட்
May 30, 2026, 9:46 am
2030 உலகக் கிண்ண போட்டியிலும் ரொனால்டோவால் விளையாட முடியும்: நிர்வாகி
May 29, 2026, 12:50 pm
சிந்து புகழ்ந்த மலேசிய இளம் நட்சத்திரம் ஆரோன் தாய்: சர்வதேச அரங்கில் அதிரடி கவனம்
May 29, 2026, 10:02 am
மலேசிய சிலம்பக் கழகத்தின் தேசிய துணைத் தலைவராக டாக்டர் உதயகுமார் வெற்றி
May 29, 2026, 9:54 am
உலகக் கிண்ண போட்டிக்கான அமெரிக்க விசாக்களுக்காக ஈரான் இன்னும் காத்திருக்கிறது
May 29, 2026, 9:49 am
