செய்திகள் விளையாட்டு
2026 உலகக் கிண்ண கோப்பையைக் கைப்பற்றும் முதல் அணியாக ஸ்பெயின்:.கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு சாத்தியமாகுமா?
சாண்டியாகோ:
உலகக் கிண்ண காற்பந்தின் காய்ச்சல் பார்வையாளர்களிடையே அதிகரித்து வரும் நிலையில் கோல்ட்மேன் சாக்ஸின் பார்வை இவ்வாண்டு ஸ்பெயினின் பக்கம் திரும்பியுள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸ் வெளியிட்ட ஒரு முன்கணிப்பு மாதிரியின் அடிப்படையில், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசிலை முந்தி, 2026 உலகக் கோப்பையை வெல்லும் விருப்பமான அணியாக ஸ்பெயின் உருவெடுத்துள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு அணியின் வெற்றி வாய்ப்புகளைத் தீர்மானிக்க வரலாற்றுச் சாதனைப் பதிவுகள், தரவரிசைத் தரவுகள், பிற காரணிகளை அந்த மாதிரியானது பயன்படுத்துகிறது.
அந்த முதலீட்டு வங்கியின் ஆராய்ச்சி அறிக்கையின்படி, உலகக் கோப்பையை வெல்வதற்கான 26 சதவீத வாய்ப்பு ஸ்பெயினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் 19 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், அதனைத் தொடர்ந்து தற்போதைய சாம்பியனான அர்ஜென்டினா 14 சதவீதத்திலும், பிரேசில் எட்டு சதவீதத்திலும், இங்கிலாந்து ஐந்து சதவீதத்திலும் உள்ளன.
இந்த முன்கணிப்பானது, எலோ தரவரிசையை (Elo rating) பெரும்பாலும் நம்பியுள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் விளக்கியுள்ளது. இத ஒரு செயல்திறன் மதிப்பீட்டு முறையாகும். இது முதலில் சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்பட்டது, பின்னர் கால்பந்தில் பயன்படுத்தப்பட்டது.
தாக்குதல் வலிமை, தற்போதைய வேகம், அணியின் மனநிலை, புவியியல் காரணிகள் போன்ற பிற காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
"அதிக எலோ தரவரிசை, வலுவான கோல் அடிக்கும் திறன், போட்டிக்கு முன்னதாக நல்ல வேகம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், வெற்றி பெறும் அணியாக ஸ்பெயின் கணிக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
'சாம்பியனின் வீழ்ச்சி' (champion's decline) என்று அழைக்கப்படும் ஒரு காரணியால், நடப்பு வெற்றியாளரான அர்ஜென்டினாவின் வாய்ப்புகள் சற்றுப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது, தற்போதைய சாம்பியன்கள் அடுத்த போட்டியில் தங்கள் செயல்திறனைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறும் போக்கு ஆகும்.
அரையிறுதியில் ஸ்பெயினை சந்திக்க வாய்ப்புள்ளதால், பிரான்ஸ் கடினமான பாதையை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய போட்டிகளில் மோசமான சாதனை, புவியியல் காரணிகள், அவர்களுக்கு சாதகமற்றதாகக் கருதப்படும் சீட்டுக் குலுக்கல் (டிரா) ஆகியவற்றின் காரணமாக, இங்கிலாந்தும் குறைந்த மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
1978 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 20,000 அதிகாரப்பூர்வ சர்வதேச போட்டிகளின் அடிப்படையில் இந்த மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டி நடைபெறும் காலம் முழுவதும், இது தினமும் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 9:46 am
2030 உலகக் கிண்ண போட்டியிலும் ரொனால்டோவால் விளையாட முடியும்: நிர்வாகி
May 29, 2026, 12:50 pm
சிந்து புகழ்ந்த மலேசிய இளம் நட்சத்திரம் ஆரோன் தாய்: சர்வதேச அரங்கில் அதிரடி கவனம்
May 29, 2026, 10:02 am
மலேசிய சிலம்பக் கழகத்தின் தேசிய துணைத் தலைவராக டாக்டர் உதயகுமார் வெற்றி
May 29, 2026, 9:54 am
உலகக் கிண்ண போட்டிக்கான அமெரிக்க விசாக்களுக்காக ஈரான் இன்னும் காத்திருக்கிறது
May 29, 2026, 9:49 am
உலகக் கிண்ண போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கு மெஸ்ஸி தலைமையேற்பார்
May 28, 2026, 10:19 am
பிரேசில் அணிக்கு அதிர்ச்சி: நெய்மரின் காயம் உலகக் கோப்பை கனவுக்கு பெரும் அச்சுறுத்தலா?
May 27, 2026, 6:02 pm
