செய்திகள் விளையாட்டு
உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக்
பாரிஸ்:
உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் என்றால் அது லூயிஸ் என்ட்ரிக்தான் என பிஎஸ்ஜி அணியின் தலைவர் நாசர் அல்-கெலைஃபி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஹங்கேரியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் 1-1 என சமநிலையில் முடிய, பெனால்டி வாய்ப்பில் பிஎஸ்ஜி அணி 4-3 என வென்றது.
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பிஎஸ்ஜி அணி கிண்ணத்தை வென்றுள்ளது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் என்ட்ரிக் (56 வயது) கடந்த 2023 சீசனில் பிஎஸ்ஜி அணியில் தலைமைப் பயிற்சியாளராக இணைந்தார்.
முதல் சீசனிலேயே லீக்1ல் கிண்ணத்தை வென்ற அவர் சாம்பியன்ஸ் லீக்கில் அரையிறுதிகுக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில், பிஎஸ்ஜி அணியின் தலைவர் நாசர் அல்-கெலைஃபி கூறியிருப்பதாவது:
இன்று வரலாற்றில் மறக்க முடியாத நாள். அணி, பயிற்சியாளர், அணியில் வேலை செய்பவர்கள், ரசிகர்கள் என அனைவரையும் நினைத்து பெருமையாக இருக்கிறது. நாங்கள் நம்பினோம்.
நல்லவேளை வென்றுவிட்டோம் கடவுளே. கடந்த சீசனை விட இந்த வெற்றி சிறப்பானது.
தொடர்ச்சியாக 2 முறை வெல்வது நம்பமுடியாத விஷயம்.
மேலும் லூயிஸ் என்ட்ரிக் மிகவும் சிறப்பானவர். ஒரு பயிற்சியாளராக, மனிதராக அவர் அற்புதமானவர்.
அவர் இந்த உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2026, 11:37 am
பிஎஸ்ஜி வெற்றி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் வன்முறை: ஒருவர் மரணம்
May 31, 2026, 10:45 am
ஸ்லாட் சரியான நேரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்: ஜெரார்ட்
May 31, 2026, 10:45 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சாம்பியன்
May 30, 2026, 9:46 am
2030 உலகக் கிண்ண போட்டியிலும் ரொனால்டோவால் விளையாட முடியும்: நிர்வாகி
May 29, 2026, 12:50 pm
சிந்து புகழ்ந்த மலேசிய இளம் நட்சத்திரம் ஆரோன் தாய்: சர்வதேச அரங்கில் அதிரடி கவனம்
May 29, 2026, 10:02 am
