செய்திகள் உலகம்
உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி: ஆளில்லா வானூர்தி பறக்கத் தடை
கலிபோர்னியா:
அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் ஆட்டங்களில் ஆளில்லா வானூர்திகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய விமானத்துறை நிர்வாகம் தெரிவித்தது.
அமெரிக்காவில் நடைபெறும் அனைத்து ஆட்டங்களுக்கும் ரசிகர் நிகழ்ச்சிகளுக்கும் தடை பொருந்தும்.
போட்டி நடைபெறும் நாட்களில், அரங்கங்களைச் சுற்றி சுமார் 5 கிலோமீட்டர் தூரம்வரை ஆளில்லா வானூர்திகளின் பயன்பாடு தடை செய்யப்படும்.
அனுமதியின்றி தடை செய்யப்பட்ட வான்வெளிக்குள் நுழையும் ஆளில்லா வானூர்தியின் உரிமையாளர்களுக்கு 100,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்றும் ஆளில்லா வானூர்திகள் பறிமுதல் செய்யப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
போட்டி அடுத்த மாதம் ஜூன் 11ஆம் தேதி தொடங்கவுள்ளது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளும் போட்டியைச் சேர்ந்து நடத்துகின்றன.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
June 5, 2026, 3:14 pm
அடுத்தடுத்து வெடிக்கும் எரிமலை: இந்தோனேசியாவில் பதற்றம்
June 5, 2026, 12:48 pm
கியூபா அதிபருக்கு அமெரிக்காவின் அதிரடி தடை: சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பு
June 5, 2026, 11:27 am
தாகத்தின் கொடூரம்: சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பரிதாப பலி
June 5, 2026, 9:56 am
புறப்படுவதற்கு முன் பரபரப்பு:.லுஃப்தான்சா ட்ரீம்லைனர் திடீரென சாய்ந்து விபத்து
June 4, 2026, 2:39 pm
ஆசியான் நாடுகளுக்கான பிரம்மாண்டமான புதிய கடல்வழிப் பாதை: சீனாவின் வரலாற்றுச் சாதனை
June 3, 2026, 2:43 pm
ஐ.நா. சபையின் புதிய தலைவராகிறார் வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான்
June 3, 2026, 12:01 pm
ஜப்பானை உலுக்கிய ஜாங்மி புயல்: உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
June 3, 2026, 10:07 am
2026 உலகக்கோப்பை சர்ச்சை: பிரபல சுவரோவிய கலைஞர் ஃபிஃபா மீது வழக்கு
June 2, 2026, 5:22 pm
