செய்திகள் மலேசியா
சிலாங்கூர், மலாக்காவில் நடந்த ஆயுதக் கொள்ளைகளுடன் தொடர்புடையவர்கள் பாங்கியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்: டத்தோ எம். குமார்
காஜாங்:
நேற்று இரவு பாங்கியின் பண்டார் செரி புத்ராவில் காவல்துறையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு உள்ளூர்வாசிகள், கடந்த ஓராண்டாக சிலாங்கூர், மலாக்காவில் நடந்த தொடர் ஆயுதக் கொள்ளைகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநர் டத்தோ எம். குமார் கூறுகையில், 25 முதல் 46 வயதுடைய சந்தேக நபர்களுக்கு, வீடு புகுந்து திருடுதல், வாகனத் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட மொத்தம் 30 முந்தைய குற்றப் பதிவுகள் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
இந்தக் குழு பொதுவாக நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள வீடுகளைக் குறிவைத்து, கைத்துப்பாக்கிகள், அரிவாள்களைப் பயன்படுத்திச் செயல்பட்டதாகவும், கொள்ளைகளின் போது அவர்கள் ஆக்ரோஷமாகச் செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களைக் காயப்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.
நேற்று இரவு சுமார் 9.10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அவர் கூறுகையில், குற்றத் தடுப்பு போலிசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த புக்கிட் அமான் சிஐடி டி9 பிரிவின் குழுவினர், பண்டார் செரி புத்ராவில் சந்தேகத்திற்கிடமான புரோட்டான் வீரா வாகனத்தைக் கண்டனர்.
"காவல்துறையினர் அந்த வாகனத்தை சுமார் 500 மீட்டர் தூரம் பின்தொடர்ந்து சென்று, சந்தேக நபர்களை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
ஆனால், அவர்கள் அதிவேகமாகச் சென்று காவல்துறை வாகனத்தின் மீது மோதினர்," என்று அவர் இன்று காஜாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 4:40 pm
தியாகம், மனவுறுதி, அர்ப்பணிப்புடன் தேவையுள்ளோருக்கு உதவுவதே குர்பான்: பிரதமர் அன்வார்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
