செய்திகள் விளையாட்டு
மெஸ்ஸிக்குக் காயம்: உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவாரா?
நியூயார்க்:
இந்தர்மியாமிக்கான போட்டியில் விளையாடும்போது கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு தொடைத் தசையில் காயம் ஏற்பட்டது.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த லியோ மெஸ்ஸி (38 வயது) இந்தர்மியாமி கிளப் அணியில் 2023 முதல் விளையாடி வருகிறார்.
கடந்த சீசனில் அந்த அணி முதல் முறையாக மெஸ்ஸி தலைமையில் எம்எல்எஸ் கிண்ணத்தை வென்றது.
நடப்பு சீசனில் சிறப்பாக விளையாடிவரும் இந்தர் மியாமி அணி உலகக் கிண்ண முன்பாக தனது கடைசி ஆட்டத்தில் பிலடெல்ஃபியாவுடன் நேற்று மோதியது.
இந்தப் போட்டியில் இந்தர் மியாமி 6-4 என த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட்டுகளைச் செய்த மெஸ்ஸி 73ஆஆவது நிமிஷத்தில் தொடைத் தசையில் ஏற்பட்ட காயத்தினால் வெளியேறினார்.
உலகக் கிண்ண போட்டிகள் ஜூன் 11ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
இந்த நிலையில் மெஸ்ஸிக்கு ஏற்பட்ட காயம் அர்ஜெண்டினா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் மெஸ்ஸிக்கு இடது தொடையில் அதிக வேலைப்பாட்டினால் தசையில் சோர்வு ஏற்பட்டுள்ளது.
இதிலிருந்து குணமாக அவரது மருத்துவ, செயல்முறை சார்ந்த முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும் என இந்தர் மியாமி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 27, 2026, 6:02 pm
டாங் ஜீ-ஈ வேய், பாங் ரான்-பெய் ஜிங்கின் கனவை முறியடித்தனர்
May 27, 2026, 9:55 am
தொடர்ந்து நான்காவது ஆண்டாகச் சாதனை: அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டாளர் ரொனால்டோ
May 26, 2026, 12:29 pm
உலகின் முதல் நிலை சீன ஜோடியை சாய்த்த ஜிம்மி-சு யின்
May 26, 2026, 10:11 am
உலகக் கிண்ணத்தை பிரேசில் அணி வெல்லும்: கார்லோ அன்செலோட்டி
May 26, 2026, 10:04 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 24, 2026, 9:40 am
தொடர்ந்து நான்காவது முறையாக மலேசியக் கிண்ணத்தை வென்று ஜேடிதி அணி வரலாறு படைத்தது
May 23, 2026, 4:43 pm
மீண்டும் களமிறங்கும் ‘பேர்லி-தினா’ ஜோடி
May 23, 2026, 3:36 pm
