செய்திகள் உலகம்
பல் சிகிச்சைக்காக நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி
ஜெருசலம்:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் பரபரப்பை எட்டியிருக்கும் நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை மாலை ஹடாசா ஐன் கெரெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பல் சிகிச்சை அளிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
76 வயதாகும் பிரதமர் நெதன்யாகு பெஞ்சமின் உடல்நிலை தொடர்பாக பொதுமக்களிடையே அரசு மறைப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த மாதம் அறிக்கை ஒன்றை இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டார்.
அதில், புராஸ்டேட் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
மேலும், தனது உடல்நிலைக் குறித்த தகவலை ஈரான் போர்ப் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் என்ற காரணத்தால், இவ்வளவு நாள் இதனை மறைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த 2024 டிசம்பர் மாதம், ஹதாசா மருத்துவமனையில் நெதன்யாகுவுக்கு புராஸ்டேட் புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இதற்கு முன்னதாக, 2023 ஜூலையில் நெதன்யாகுவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தும் இதய அறுவைச் சிகிச்சையும், 2024 மார்ச்சில் குடல் இறக்க அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
