செய்திகள் வணிகம்
போர்ட்டிக்சன் ஸ்ரீ எஹ்சான் திருமண மண்டபம்; அனைத்து வசதிகளுடன் நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது: டத்தோ அப்துல் ஹமித்
போர்ட்டிக்சன்:
போர்ட்டிக்சன் ஸ்ரீ எஹ்சான் திருமண மண்டபம் அனைத்து வசதிகளுடன் நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
எஹ்சான் வர்த்தக குழுமத்தின் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.
போர்ட்டிக்சன், பாசிர் பஞ்சாங் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ எஹ்சான் திருமண மண்டபத்தின் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இம்மண்டபத்தை தனது துணையியாருடன் திறந்து வைத்த டத்தோ ஹமித் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எஹ்சான் குழுமத்தின் புதிய முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திருமண மண்டபம், ஒரே நேரத்தில் சுமார் 1,000 பேர் அமரக்கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபம், ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை ஒத்த தோற்றத்தையும் தரத்தையும் கொண்டுள்ளது.
மண்டப முன்பதிவுகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்பதிவு செய்பவர்களுக்கு 7,888 ரிங்கிட் முதல் தள்ளுபடி விலையில் திருமண தொகுப்புகள் வழங்கப்படுவதுடன், உணவுகளுக்காக மூன்று வகையான பேக்கேஜ்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்த மண்டபத்தில் திருமணம் செய்து கொள்ளும் புதுமணத் தம்பதிகளுக்கு எசான் தங்கும் விடுதியில் ஒரு நாள் இலவச தங்கும் வசதியும் இரவு உணவும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
முன்பதிவு செய்ய விரும்புவோர் 500 ரிங்கிட் முன்பணம் செலுத்தி தங்களது தேதியை உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும் 1,000 பேருக்கான உணவு, மண்டப வசதியுடன் கூடிய திருமண ஏற்பாடுகள் வெறும் 25,000 ரிங்கிட் மட்டுமே.
இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டு க்கொண்டார்.
இந்த புதிய திருமண மண்டபம் போர்ட்டிக்சன் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு சிறந்த திருமண நிகழ்வு மையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
