செய்திகள் மலேசியா
புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தில் மறைந்த ஜோகூர் இளவரசரின் மனவுறுதியைக் கௌரவிக்கும் வகையில் 'துங்கு லக்ஷமண அப்துல் ஜலீல்' என்று முதல் LMSB2 கப்பலுக்கான பெயர் சூட்டப்பட்டுள்ளது: முகமது காலித்
இஸ்தான்புல்:
தேசிய கடல்சார் இறையாண்மையைப் பாதுகாப்பதில் மலேசிய அரச கடற்படையின் (RMN) செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்தும் வகையில், துருக்கியில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் தொகுதி கடலோரப் பணிக் கப்பல்களில் (LMSB2) மூன்று கப்பல்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் மலேசியா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஜூன் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் காலித் நோர்டின் தெரிவித்தார்.
முதல் LMSB2 கப்பலுக்குப் பெயர் சூட்டி, அதை நீரில் இறக்கும் நிகழ்வு நேற்று இங்குள்ள இஸ்தான்புல் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றதாகவும், இரண்டாவது, மூன்றாவது கப்பல்கள் முறையே இந்த ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் நீரில் இறக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
துரதிர்ஷ்டவசமாக நீண்ட தாமதங்களைச் சந்தித்த கடலோரப் போர்க் கப்பல் (LCS) திட்டத்துடன் ஒப்பிடும்போது, கட்டுமானப் பணிகள் எந்தவித அறைகூவல்களோ சிக்கல்களோ இன்றி நடைபெற்றுள்ளதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த LMSB2 கப்பல்கள் நாட்டிற்கு மிகவும் முக்கியமானவை.
"நமது தேசிய பாதுகாப்பு வரைவுத் திட்டம், இது போன்ற 18 கப்பல்களுக்கான தேவையை கோடிட்டுக் காட்டுகிறது. தற்போது நம்மிடம் நான்கு கப்பல்கள் உள்ளன, மேலும் துருக்கியில் கட்டப்பட்ட இந்த மூன்று கப்பல்களும் கட்டி முடிக்கப்பட்டவுடன், நமது கப்பல் படை ஏழாக உயரும்."
"ஒரு கடல்சார் நாடாக நமது தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய, நாம் மேலும் 11 கப்பல்களைக் கட்ட வேண்டும்," என்று நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் அவர் கூறினார்.
துங்கு லக்ஷமணா அப்துல் ஜலீல் எனப் பெயரிடப்பட்ட முதல் LMSB2 கப்பலுக்கு, மலேசியாவின் ராணி மாட்சிமை பொருந்திய ராஜா ஜரித் சோஃபியா அவர்களால் அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுத் தொடங்கி வைக்கப்பட்டது.
அந்தக் கப்பல் கடல் சோதனைக் கட்டங்களுக்குள் நுழைவதற்கு முன்பு, அதன் உடற்கட்டமைப்பு நிறைவடைவதைக் குறிக்கும் ஒரு கடற்படை மரபே இந்தப் பெயரிடுதல், தொடக்க விழா என்று முகமதுமுஹம்மத் காலித் கூறினார்.
வரும் காலங்களில், உள்ளூர் கப்பல் கட்டுநர்கள் எதிர்காலக் கப்பல் தொகுதிகளை உள்நாட்டிலேயே கட்டுவதற்கு ஏதுவாக, தொழில்நுட்பப் பரிமாற்ற முயற்சிகளை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
"மூன்றாவது தொகுதியை நாம் கொள்முதல் செய்யும்போது, மலேசியாவிலேயே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம்... இன்ஷா-அல்லாஹ், இந்தப் பயணத்தின் போது, இந்தக் கப்பல்களுக்கான உதிரிபாகங்களை வழங்கும் பல துருக்கிய நிறுவனங்களை நான் சந்தித்தேன்" என்று அமைச்சர் கூறினார்.
முதல் LMSB2 கப்பலுக்கான பெயர் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த முகமது காலித், புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தில் மறைந்த ஜோகூர் இளவரசரின் மனவுறுதியைக் கௌரவிக்கும் வகையில் 'துங்கு லக்ஷமண அப்துல் ஜலீல்' என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஆதாரம்: பெர்னாமா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 11:02 am
காசா குறித்து மலேசியா மௌனம் காக்காது: அமிருதீன் சூளுரை
May 25, 2026, 9:59 am
பெட்ரோனாஸ் FSO செப்பாட் தளத்தில் விபத்து: 3 பேர் பலி: பெட்ரோனாஸ் அறிவிப்பு
May 24, 2026, 10:51 pm
