செய்திகள் மலேசியா
பாஸ் கட்சியின் முடிவுகள் ஹாடியால் மட்டும் எடுக்கப்படுவதில்லை; மஜ்லிஸ் ஷுரா எனும் ஆலோசனை மன்றத்தால் விவாதிக்கப்பட்டு எடுக்கப்படுகின்றன: ஷாஹிர் சுலைமான்
கோத்தபாரு;
பாஸ் கட்சி, அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் மட்டும் முடிவுகளை எடுப்பதில்லை என்றும், மஜ்லிஸ் ஷுரா எனும் கலந்தாலோசனை மூலம் கூட்டாக முடிவுகளை எடுக்கிறது என்றும் அதன் உதவிப் பொதுச்செயலாளர் ஷாஹிர் சுலைமான் கூறினார்.
ஹாடியின் அரசியல் செயலாளராகவும், பச்சோக் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஷாஹிர், பெர்சத்துவுடனான தனது உறவுகளை மறுபரிசீலனை செய்வதில் பாஸ் கட்சி ஒரு “பிற்போக்குத்தனமான நடைமுறையை” பின்பற்றுகிறது அல்லது சர்வாதிகார அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
பாஸ் கட்சி, குர்ஆன், நபிவழியை மிக உயர்ந்த ஆதாரங்களாகக் கொண்டு, ஷூரா (கலந்தாலோசனை) மற்றும் முஸ்யவரா (ஆலோசனை) ஆகிய நடைமுறைகளைப் பின்பற்ற்றித்தான் முடிவுகளை எடுக்கிறது. அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழிமுறை..
ஆன்மீகத் தலைவர், தலைவர் உட்பட, கட்சியில் ஒவ்வொரு மட்டத்திலும் கட்டுப்பாடுகளும் சமநிலைகளும் உள்ளன; யாரும் விதிவிலக்கல்ல. அடிமட்டம் முதல் மத்திய தலைமை, மஜ்லிஸ் ஷூரா சபை வரை முடிவுகள் கூட்டாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்படுகின்றன.
எந்தவொரு முடிவும் தனிப்பட்ட ரீதியில் தீர்மானிக்கப்படுவதில்லை,” என்று அவர் கூறினார்.
மராங்கில் உள்ள மஸ்ஜித் ருசிலாவைக் குறிப்பிடுகையில், அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாடி அடிக்கடி மார்க்க சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். அமைப்புசார் திட்டமிடல், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அரசியல் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வது இயல்பானது என்று ஷாஹிர் கூறினார்.
உதாரணமாக, வரவுசெலவுத் திட்டங்கள், மலேசியத் திட்டங்கள் இடைக்கால மறுஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அது ஒரு பொதுவான நடைமுறை. “விஷயங்களைச் சரிசெய்து மேம்படுத்துவதற்கும், எதைச் சேர்க்க வேண்டும், எதை நீக்க வேண்டும், எதைத் தக்கவைக்க வேண்டும் அல்லது எதை மாற்ற வேண்டும் என்பதைப் பற்றி சிந்திப்பதற்கும் கலந்தாலோசிப்பதற்குமான காலம் இது,” என்று அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை அன்று, முஹைடின் யாசின் தலைமை இல்லாமல் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, பெர்சத்துவுடனான தனது கூட்டணியை பாஸ் கட்சி மறுமதிப்பீடு செய்து வருவதாக ஹாடி அவாங் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 11:02 am
காசா குறித்து மலேசியா மௌனம் காக்காது: அமிருதீன் சூளுரை
May 25, 2026, 9:59 am
பெட்ரோனாஸ் FSO செப்பாட் தளத்தில் விபத்து: 3 பேர் பலி: பெட்ரோனாஸ் அறிவிப்பு
May 24, 2026, 10:51 pm
