செய்திகள் மலேசியா
தலைநகரில் உள்ள ஒரு முக்கிய கட்டிடத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல்
கோலாலம்பூர்:
தலைநகரில் உள்ள ஒரு முக்கிய கட்டிடத்தில் நேற்று இரவு ஒரு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரிக்பீல்ட்ஸ் போலிஸ் நிலையத் தலைவர் ஹூ சாங் ஹூக் இதனை கூறினார்.
இரவு 9.09 மணிக்கு அந்தக் கட்டிடத்தின் பாதுகாப்பு ஊழியர் ஒருவரிடமிருந்து இந்த அழைப்பு வந்தது.
கட்டிடத்தின் வடக்கு கோபுரத்தின் 23ஆவது மாடியில் ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சல் தனக்கு வந்ததாக அந்தப் பாதுகாப்பு ஊழியர் எங்களிடம் தெரிவித்தார்.
அது ஒரு பொய்யான அச்சுறுத்தல் என்பதைக் கண்டறிவதற்கு முன்பு, தேடுதல் நடத்துவதற்காக வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு, மோப்ப நாய்ப் பிரிவு, தடயவியல் பிரிவு ஆகியவை உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த வழக்கு, 1998ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையச் சட்டத்தின் பிரிவு 233, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
