நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜசெகவின் உட்கட்சிப் பூசலில் எங்களை இழுக்காதீர்கள்: ரபிஸி

கோலாலம்பூர்:

ஜசெக தலைவர்களில் ஒருவரான டோனி புவா தனது சொந்தக் கட்சியின் விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அக்கட்சியின் உட்கட்சி மோதல்களில் மற்ற கட்சிகளை இழுக்கக் கூடாது என்று ரபிஸி ரம்லி வலியுறுத்தியுள்ளார்.

ரபிஸிக்கு விசுவாசமான கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் இடங்களைக் காலி செய்துவிட்டு அவரது தலைமையிலான பெர்சமா கட்சிக்குத் தாவ மறுப்பதால், அவர்களை தற்பெருமை கொண்டவர்கள் என்று முத்திரை குத்திய முன்னாள் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரின் சமீபத்திய அறிக்கையைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.

ஜசெக கட்சிக்குள் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் இருப்பதாகவும், தனது தரப்பின் மீது புவா நடத்திய தாக்குதலில் இதைக் காணலாம் என்றும் அவர் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கம் கவிழ வேண்டும் என்று விரும்பும் ஜசெக கட்சிக்குள் உள்ள சிறுபான்மைக் குழுவுடன் புவா இருக்கிறார்.

அதே நேரத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் தலைமையிலான கட்சியின் பிரதான குழு, அரசாங்கம் தொடர்ந்து நம்பிக்கை கூட்டணியால் வழிநடத்தப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset