நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் நாளை திங்கட்கிழமை பொது விடுமுறை: மந்திரி புசார் அறிவிப்பு

ஜொகூர்பாரு:

ஜொகூர் மாநில அரசாங்கம் நாளை திங்கட்கிழமை (மே 25) மாநிலம் முழுவதும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற 2025/26 மலேசிய கிண்ண கால்பந்து போட்டியில்  ஜேடிதி அணி கிண்ணத்தை வென்றதையடுத்து இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

ஜொகூரின் இடைக்கால சுல்தான், சுல்தான் துங்கு இஸ்மாயிலின் ஒப்புதலுடன் இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டதாக முதலமைச்சர் டத்தோ ஓன் ஹபிஸ் காசி தெரிவித்தார்.

சுல்தானின் ஒப்புதலுடன்  மலேசியக் கிண்ணத்தை ஜேடிதி வென்றதை முன்னிட்டு, நாளை திங்கட்கிழமை ஜொகூர் மாநிலத்திற்குப் பொது விடுமுறையாக அறிவிக்க மாநில அரசு இதன் மூலம் ஒப்புக்கொள்கிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக, விறுவிறுப்பான  இறுதிப் போட்டியில் ஜேடிதி அணி, கூச்சிங் சிட்டி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகரமாகத் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset