செய்திகள் விளையாட்டு
மூன்று ஆண்டுகளுக்குப் பின் பிரேசில் அணியில் நெய்மார்: மீண்டும் உலகக் கோப்பையில் களம் காணும் பிரேசில் சிங்கம்
ரியோ டி ஜெனிரோ:
பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மார், இன்று உலகக் கோப்பைக்கான பிரேசில் அணியில் விளையாட மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் தேசிய அணியில் அவர் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
128 ஆட்டங்களில் 79 கோல்களுடன் பிரேசிலின் அனைத்துக் கால சாதனை கோல் அடித்த வீரரான நெய்மாரின் பங்கேற்பானது தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி அறிவித்த 26 வீரர்கள் கொண்ட அணியில் மிகப்பெரிய அதிர்ச்சியாகும்.
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒரு காலா நிகழ்வில், அந்த மூத்த தாக்குதல் வீரர் மீண்டும் அழைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதும், எழுந்த ஆரவாரத்துடன், அன்செலோட்டி நெய்மாரின் தேர்வை அறிவித்தார்.
34 வயதான முன்னாள் பார்சிலோனா, பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் முன்கள வீரர், மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிக்க முடியுமா என்பது குறித்து கடந்த சில மாதங்களாக ஊகங்கள் நிலவி வந்தன.
2014, 2018, 2022 உலகக் கோப்பைகளில் விளையாடிய அந்த முன்கள வீரர், 2023 ஆம் ஆண்டில் உருகுவேய்க்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் முழங்காலில் காயம் ஏற்பட்டதிலிருந்து, பிரேசிலுக்காக விளையாடவில்லை.
காயப் பிரச்சினைகள், நிலையற்ற செயல்திறன் ஆகியவற்றின் கலவையானது, தேசிய அணியில் இருந்து அவரை விலக்கியது. கடந்த மார்ச் மாதத்தில், பிரான்ஸ், குரோஷியாவுக்கு எதிரான நட்புப் போட்டிகளுக்கான அணியில் அவரைச் சேர்க்காத போது, அவரது உடல் தகுதி நிலை குறித்து அன்செலோட்டி முன்னர் கவலை தெரிவித்திருந்தார்.
இருப்பினும், சவூதி அரேபியாவில் காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு மோசமான காலத்திற்குப் பின்னர், ஜனவரி மாதம் தனது இளமைக் கால கிளப்பான சாண்டோஸ் எஃப்சியில் மீண்டும் இணைந்த நெய்மார், இப்போது அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான அன்செலோட்டியின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.
"நாங்கள் ஆண்டு முழுவதும் நெய்மாரைக் கண்காணித்தோம். சமீபத்தில், அவர் தொடர்ந்து விளையாடுவதையும், அவரது உடல் தகுதி நிலை மேம்படுவதையும் கண்டறிந்தோம்" என்று அன்செலோட்டி கூறினார்.
"அவர் ஒரு முக்கிய வீரர் என்று நாங்கள் நம்புகிறோம்."
ஆறாவது உலகக் கோப்பைப் பட்டத்தை நாடும் பிரேசில், ஜூன் 13 ஆம் தேதி மொராக்கோவுக்கு எதிராக தனது பிரச்சாரத்தைத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து, குழு C-வில் ஹைதி, ஸ்காட்லாந்தை எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெய்மார், பார்சிலோனாவின் முன்கள வீரர் ராஃபின்ஹா, ரியல் மாட்ரிட்டின் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு வலுவான தாக்குதல் வரிசையை வழிநடத்துவார்.
உலகக் கோப்பை, மிகவும் உறுதியான அணியால் வெல்லப்படும் என்று அன்செலோட்டி நம்புகிறார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
